Print and Digital Media

ஆசிரியர் பக்கம்.

ஒரு முழு நேர செய்தியாளராக சிறப்பாக பணியாற்றி தற்போது

"தி லெஜெண்ட்"என்ற பெயரில் மாதம் இருமுறை இதழை முறையாக மத்திய அரசின் அனுமதி பெற்று தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறோம்.

அரசு அதிகாரிகள், அலுவலர்கள்,அரசியல் பிரமுகர்கள்,காவல்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், அரசு மற்றும் தனியார்துறை சார்ந்த பிரபலங்கள்,ஏழை எளிய விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கடை நிலை ஊழியர்கள்,சுயதொழில் புரிவோர், வியாபாரிகள் மேலும் பல்வேறு துறை சாதனையாளர்கள் என தங்களது துறைகளில் சாதித்து அந்த சாதனைகள் வெளி உலகத்திற்கு கொண்டு செல்ல இயலாமல் தவிர்த்து வருபவர்களின் தவிப்பை போக்குவதற்காக உருவாக்கப்பட்டது இந்த தி லெஜெண்ட் இதழ்.

ஊடக வெளிச்சம் படாமல் தமிழக முழுவதும் ஊடுருவி இருக்கின்ற சாதனையாளர்களைத் தேடிப் பிடித்து அவர்களின் சாதனைகளை வெளி உலகத்திற்கு கொண்டுவரும் அளப்பரிய பணிகளை மட்டுமே இன்று தொடங்கி வரும் காலங்களில் நமது இதழ் செய்ய உள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் நமது இதழை கொண்டு சேர்ப்பதற்கான சீரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

thelegendnews.in என்பது எங்களுடைய இதழின் மறு வடிவமான செய்தி இணையதளமாகும்.எங்களது இதழில் வரும் செய்திகள் அனைத்தும் எங்களது இணையத்திலும் வெளியிடப்படும்.மேலும் எங்களது இதழை இணையத்தில் பி.டிஃஎப். வடிவிலும் படிக்கலாம்.மேலும் எங்களது "தி லெஜண்ட்" கூகுள் "பிளே ஸ்டோரில் " செயலி வடிவிலும் கிடைக்கிறது என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் உங்களது அன்பையும், ஆதரவையும் நாடும்,

K.ராதாகிருஷ்ணன்.

ஆசிரியர் மற்றும் வெளியிட்டார்.